search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இது வெறும் ஆரம்பம்.. இனிமே தான் ஆட்டமே.. ஜவான் முன்னோட்ட வீடியோ வைரல்
    X

    இது வெறும் ஆரம்பம்.. இனிமே தான் ஆட்டமே.. "ஜவான்" முன்னோட்ட வீடியோ வைரல்

    • ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இது வெறும் ஆரம்பம்.. இனிமே தான் ஆட்டமே.. போன்ற மாஸான வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    Next Story
    ×