search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜவான் முன்னோட்ட வீடியோ.. புதிய அப்டேட் கொடுத்த இயக்குனர் அட்லீ
    X

    ஜவான் முன்னோட்ட வீடியோ.. புதிய அப்டேட் கொடுத்த இயக்குனர் அட்லீ

    • ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.




    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




    'ஜவான்' திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ அனைத்து ப்ளாட்ஃபார்களையும் சேர்த்து 115 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக இயக்குனர் அட்லீ போஸ்டர் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×