search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உதயநிதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் நடிகர் கமல்?
    X

    உதயநிதி ஸ்டாலின் -கமல்ஹாசன்

    உதயநிதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் நடிகர் கமல்?

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    உதயநிதி ஸ்டாலின் -மாரி செல்வராஜ்

    'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர்.


    மாமன்னன்

    இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாகவும் இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×