என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
கங்குவா மோடில் சூர்யா.. வைரலாகும் வீடியோ
- நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கங்குவா
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சூர்யா
இந்நிலையில், நடிகர் சூர்யா 'கங்குவா' படத்திற்காக உடற்பயிற்சி செய்து தனது உடலை மெருகேற்றி வருகிறார். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
It's #Kanguva mode ???@Suriya_offl @KanguvaTheMovie #AnbaanaFans pic.twitter.com/PS3yQfk226
— Studio Green (@StudioGreen2) May 11, 2023