என் மலர்
சினிமா செய்திகள்
X
தீபாவளி ரேசில் களம் இறங்கிய கார்த்தியின் 'ஜப்பான்'
Byமாலை மலர்25 May 2023 10:31 AM IST (Updated: 25 May 2023 10:32 AM IST)
- ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜப்பான்'.
- அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மேலும் ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபமாக நிற்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Next Story
×
X