என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![சாதி, நமக்கு சாமி மாதிரி.. வைரலாகும் கழுவேத்தி மூர்க்கன் பட டிரைலர் சாதி, நமக்கு சாமி மாதிரி.. வைரலாகும் கழுவேத்தி மூர்க்கன் பட டிரைலர்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/19/1883830-mu.webp)
கழுவேத்தி மூர்க்கன்
சாதி, நமக்கு சாமி மாதிரி.. வைரலாகும் கழுவேத்தி மூர்க்கன் பட டிரைலர்
![Rahul Gandhi Rahul Gandhi](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
கழுவேத்தி மூர்க்கன்
இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
கழுவேத்தி மூர்க்கன்
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கனு நினைச்சிட்டு இருக்கீங்க. சாதி, நமக்கு சாமி மாதிரி போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.