என் மலர்
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.
- இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மாமன்னன்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

மாமன்னன்
'மாமன்னன்' படத்தில் வடிவேலு பாடியுள்ள பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு, "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
"பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில்
— Udhay (@Udhaystalin) May 19, 2023
அலையடிக்கிறது கடல்"#RaasaKannu 1st single from #MAAMANNAN?at 5 PM today
Music by @arrahman
Sung by #Vadivelu.@mari_selvaraj @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off… pic.twitter.com/HhJDt854Y2
- கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர்.
- இதில் நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார்.
பிரான்சில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்த விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் உலகில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி, ராகுல்ராய் நடித்த ஆக்ரா, மணிப்பூரில் 1990-ல் வெளியான இஷானோ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் கலந்து கொள்ள மத்திய மந்திரி எல்.முருகன் தலைமையில் பட குழுவினர் சென்றுள்ளனர். நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை குஷ்பு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை உடுத்தி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Taking tradition and culture of our beautiful nation, INDIA, forward, with pride!
— KhushbuSundar (@khushsundar) May 19, 2023
At Cannes, walking the red carpet in a traditional South Indian Kanjeevaram saree. Each saree is handwoven, helping our weavers to keep the art alive.
What an honor to represent our country as… pic.twitter.com/rCGOKEq5d4
- இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

கழுவேத்தி மூர்க்கன்
இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

கழுவேத்தி மூர்க்கன்
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கனு நினைச்சிட்டு இருக்கீங்க. சாதி, நமக்கு சாமி மாதிரி போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடிப்பதாக நேற்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகக்ளை குவித்து வருகின்றனர்.
- எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சர்வானந்த்.
- இவருக்கு ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது. இதனை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்து இருந்தார். சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பி இருக்கிறார் என்றும், திருமண வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். ஆனாலும் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
- ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்.
- ரஜினியுடன் கபில்தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
- இயக்குனர் செல்வராகவன் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்தும் வருகிறார்.
- இவர் தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன்
இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

செல்வராகவன்
அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் செல்வராகவன் தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தி ஈர்த்து வருகிறது. அதில், "உங்கள் வாழ்க்கையில் வரும் அனைவரும் எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள். அதனால் எதையும் உண்மை என்று நம்பி விடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் வாழ்க்கையில் வரும் அனைவரும் எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள். அதனால் எதையும் உண்மை என்று நம்பி விடாதீர்கள். ??
— selvaraghavan (@selvaraghavan) May 17, 2023
- நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் 'ஃபர்ஹானா'.
- இப்படத்திற்காக நடிகர் ஜித்தன் ரமேஷ் மாலைமலர் நேயர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் 'ஃபர்ஹானா'. இதில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்த ஜித்தன் ரமேஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜித்தன் ரமேஷ், ஃபர்ஹானா திரைப்படம் குறித்தும் அவரின் திரைப்பயணம் குறித்தும் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மாலைமலருக்கு பேட்டியளித்த ஜித்தன் ரமேஷ்
அவர் பேசியதாவது, ஃபர்ஹானா திரைப்படத்திற்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இனி நான் கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பேன். தற்போது ஜப்பான் மற்றும் ரூட் நம்பர் 17 படத்தில் நடித்து வருகிறேன். படம் சிறப்பாக இருக்கும் அதே சமயம் வித்யாசமாகவும் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது அங்கு மிகவும் போர் அடிக்கும். டாஸ்க் நடைபெறும் போது மட்டும் பயங்கர ஜாலியாக இருக்கும்.

ஜித்தன் ரமேஷ்
அவன் - இவன் படம் நானும் ஜீவாவும் பண்ண வேண்டியது. முதலில் இயக்குனர் பாலா சார் எங்களை அழைத்து தான் பேசினார். அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை எங்கள் கையை விட்டு சென்று விட்டது. சூப்பர் குட் ஃபிலிம்சின் 100வது படம் கண்டிப்பாக தளபதி விஜய்யை வைத்து தான் பண்ணுவோம் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் ஜித்தன் ரமேஷின் பிரத்யேக பேட்டியை கீழே காணலாம்:
- பருத்திவீரன் படத்தில் ‘பொணந்தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு.
- உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாழை ராசு காலமானார்.
கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' படத்தில் 'பொணந்தின்னி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. அதன்பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

செவ்வாழை ராசு
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 70 வயதாகும் செவ்வாழை ராசுவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
- இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ஜூனியர் என்டிஆர் படக்குழு வெளியிடவுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

என்டிஆர்30 படக்குழு
இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

என்டிஆர்30
இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 19ம் தேதியன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- நகைச்சுவை நடிகர் சூரி, சமீபத்தில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் விடுதலை.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று, சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.
வேலாயுதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, அஞ்சான், அண்ணாத்தே உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. இவர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயாகனாக நடித்த விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.

சூரி
இந்நிலையில் நடிகர் சூரி, சமீபத்தில் அஜித்தை சந்தித்து பேசியதாகவும் அப்பொழுது சூரியிடம் அஜித் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் இணையத்தில் பேசப்படுகிறது. அஜித் கூறியதாவது, "மற்றவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்களை பற்றி வரும் விமர்சனங்களை தலையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மதிக்க தொடங்குங்கள் பிறகு மற்றவர்கள் தானாக உங்களை மதிப்பார்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள் சூரி" என்று அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
- ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்து சில தினங்களுக்கு முன்பு சர்ச்சையானது.
அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராஷ்மிகா மந்தனா - ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக தான் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது,
"அன்பிற்குரிய நண்பர்களே...
நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன், ஐஸ்வர்யா ராஜேஷ்" என்று குறிப்பிட்டுள்ளார்.