search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரைப்பிரபலங்கள் பங்கேற்கும் சூப்பர் 10 கிரிக்கெட் லீக்.. நடிகர் கிச்சா சுதீப் தொடங்கி வைத்தார்..
    X

    கிச்சா சுதீப்

    திரைப்பிரபலங்கள் பங்கேற்கும் 'சூப்பர் 10' கிரிக்கெட் லீக்.. நடிகர் கிச்சா சுதீப் தொடங்கி வைத்தார்..

    • 'சூப்பர் 10’ கிரிக்கெட் லீக் டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்கவுள்ளது.
    • இதில் திரை நட்சத்திரங்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்து, 'சூப்பர் 10' என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தனர். இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் இந்த வருடம் டிசம்பர் மாதம் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.


    கிறிஸ் கெய்ல்

    இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர். இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி 'டி10' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்.


    கிச்சா சுதீப்

    மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில், "சூப்பர் டி10 லீக் கிரிக்கெட் என்பது திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும். இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×