என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
மாணவி நந்தினி வீட்டிற்கு நேரில் சென்று தங்க பேனாவை பரிசளித்த கவிஞர் வைரமுத்து
Byமாலை மலர்11 May 2023 1:46 PM IST
- திண்டுக்கல் மாணவி நந்தினி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
- மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை பரிசளித்து கவிஞர் வைரமுத்து மகிழ்ந்தார்.
பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார். மாணவி நந்தினிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, அவர் பெற்ற தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிதையின் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். மேலும் மாணவி நந்தினிக்கு தனது வாழ்த்துக்களை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
Next Story
×