என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு? சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு?](https://media.maalaimalar.com/h-upload/2022/11/07/1788273-1.jpg)
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’.
- இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.
மாவீரன்
"மாவீரன்" திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. சமீபத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர்
ஆனால், மழையின் காரணமாக படம் நிறுத்தப்பட்டதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "மாவீரன்" திரைப்படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.