search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கேப்டன் மில்லர் படக்குழுவிடம் விசாரணையா? அமைச்சர் துரைமுருகன் பதில்
    X

    துரைமுருகன்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேப்டன் மில்லர் படக்குழுவிடம் விசாரணையா? அமைச்சர் துரைமுருகன் பதில்

    • தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது, குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தினார். பின்னர் படக்குழு உரிய அனுமதி பெறவில்லை என்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


    இதையடுத்து, 'கேப்டன் மில்லர்' படக்குழுவினர் முறையான அனுமதி வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, நீர்நிலைகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன? யார் இந்த அனுமதியை கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி அதில் தவறு இருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×