என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இந்தியில் பேச வற்புறுத்திய சிஐஎஸ்எப் வீரர்கள்.. சித்தார்த் கண்டனத்திற்கு ஆதரவு தெரிவித்த சு.வெங்கடேசன்..
- மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.
- சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.
சித்தார்த் பதிவு
அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சு. வெங்கடேசன்
சித்தார்த்தின் இந்த பதிவு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 28, 2022
திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு
குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென @aaimduairport கோரியுள்ளேன்.#Siddharth #Actor #Tamil #StopHindiImposition pic.twitter.com/TjpUJRQBgd