என் மலர்
சினிமா செய்திகள்
இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன்
- மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நிவின் பாலி.
- இவர் தற்போது கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவரை பெயரிடப்படாமல் இருந்து வருவதால் படத்தின் தலைப்பு மீது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இப்படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Title look of #DirectorRam's next #ProductionNo7 produced by @VHouseProd_Offl @sureshkamatchi starring @NivinOfficial @yoursanjali @sooriofficial will be out on October 11th at 12 PM 😊@eka_dop @UmeshJKumar @silvastunt @johnmediamanagr#PattanamRasheed #ChandrakantSonawane pic.twitter.com/QIxGCL2Zma
— Raja yuvan (@thisisysr) October 8, 2022