search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பெரிய எழுத்தாளர் அப்படி பேசியதில் வருத்தம் - பாக்யராஜ்
    X

    பெரிய எழுத்தாளர் அப்படி பேசியதில் வருத்தம் - பாக்யராஜ்

    • அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
    • மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது.

    சசிகலா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், "கா".

    இந்த படம் மார்ச் 22-ம்ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், "ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார் அவருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது."


    "அந்த காலத்தில், வெளியாகும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இது போல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்."

    "மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதைக் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். பெரிய எழுத்தாளர் இப்படிப் பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக்காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்க வில்லையே என கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    Next Story
    ×