என் மலர்
சினிமா செய்திகள்

ஓ. பன்னீர் செல்வம் - வைரமுத்து
உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன்.. ஓ. பன்னீர் செல்வம் தாயார் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்..
- ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பழனியம்மாள் நாச்சியார்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன். மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே. ஒரு முதலமைச்சரைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை. என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே. எல்லாத் துன்பங்களிலிருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக" என்று பதிவிட்டுள்ளார்.
உங்களைப் போலவே
— வைரமுத்து (@Vairamuthu) February 25, 2023
நானும் கலங்குகிறேன்
மூத்து முதிர்ந்து
உதிர்ந்தாலும்
தாய் தாய்தானே
ஒரு முதலமைச்சரைப்
பெற்றுக்கொடுத்தோம் என்ற
பெருமாட்டியின் பெருமை
மறைவதில்லை
என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே
எல்லாத்
துன்பங்களிலிருந்தும்
காலம் உங்களை
மீட்டெடுப்பதாகுக






