என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ஓடிடியில் வெளியாகும் பொன்னியின் செல்வன்? ஓடிடியில் வெளியாகும் பொன்னியின் செல்வன்?](https://media.maalaimalar.com/h-upload/2022/10/22/1780850-1.jpg)
பொன்னியின் செல்வன்
ஓடிடியில் வெளியாகும் 'பொன்னியின் செல்வன்'?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
- இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன்
இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
பொன்னியின் செல்வன்
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் இப்படம் நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.