என் மலர்
சினிமா செய்திகள்
X
மஞ்சு வாரியருடன் இணைந்த பிரபு தேவா
Byமாலை மலர்3 Oct 2022 3:45 PM IST (Updated: 3 Oct 2022 3:46 PM IST)
- நடிகை மஞ்சு வாரியர் தற்போது நடித்து வரும் படம் 'ஆயிஷா'.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' பாடல் வெளியாகி உள்ளது.
'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது 'ஆயிஷா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் 'ஆயிஷா' படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்த பாடலை பி.கே.ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X