search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோபத்தை குறியீடாக சொல்லும் கதையின் நாயகனான புகழ்!
    X

    புகழ்

    கோபத்தை குறியீடாக சொல்லும் கதையின் நாயகனான புகழ்!

    • இயக்குனர் எம்.ஜே.இளன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் கதாநாயகனாக புகழ் நடிக்கிறார்.

    இயக்குனர் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'துடிக்கிறது மீசை'. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இந்த விழாவில் விழாவில் புகழ், முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குனர் பேரரசு, மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


    'துடிக்கிறது மீசை' படத்தைப் பற்றி இயக்குனர் எம்.ஜே. இளன் பேசியதாவது, "படத்தின் கதை என்னவென்றால், காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை இது. காதலுடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி இந்த கதை பேசுகிறது. இக்கதை மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இந்த கதையை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் காதல், நகைச்சுவை கலந்து சுவாரஸ்சியமாகக் கூறவிருக்கிறோம்.


    இன்றைய சினிமாவின் ஆரோக்கியமான விஷயமாக எனக்கு ஒன்று தோன்றுகிறது. இன்று எத்தனை பெரிய நட்சத்திரங்கள் நடித்தாலும் அவை வெற்றிபெறும் என்று கூற முடியாது. ஆனால் நல்ல கதை அம்சம் உள்ள படங்கள், புதுமையான திரைக்கதை உள்ள படங்கள் இப்போது வெற்றி பெற்று வருகின்றன. இது ஒரு நல்ல ஆரோக்கியமான, என்னைப் போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் புகழ்பெற்ற வசனமான 'துடிக்கிறது மீசை' என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளோம். இத்தலைப்பு கோபத்தை குறியீடாக சொல்கிறது.


    இப்படத்திற்கு ஒளிப்பதிவு அசோக்குமார், இசை ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசைவாணன், சீர்காழி சிற்பி என்று சினிமா மீது பேரார்வமும் திறமையும் உள்ளவர்கள் இணைந்துள்ளார்கள். படப்பிடிப்புக்கு நம்பிக்கையோடு புறப்படுகிறது படக்குழு" என்றார்.

    Next Story
    ×