search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தியேட்டர்ல பாப்கார்ன், கூல்டிரிங்ஸ்லாம் எதுக்கு வாங்குறீங்க.. ராதா ரவி ஆவேசம்
    X

    ராதாரவி

    தியேட்டர்ல பாப்கார்ன், கூல்டிரிங்ஸ்லாம் எதுக்கு வாங்குறீங்க.. ராதா ரவி ஆவேசம்

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் மீண்டும் 'சாமானியன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.
    • இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி படக் குறித்தும், ராமராஜன் குறித்தும் பேசியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றன. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன.

    சாமானியன்

    தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.

    ராமராஜன்

    இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய ராதாரவி, "இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன். அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.

    ராதாரவி

    ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின அவ்வளவுதான். ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது. ஒருமுறை நடிகர் கமல் விமானநிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம். ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார்.

    ராதாரவி

    அவருக்கு மனசு சுத்தம். அதனால் தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன். இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்த படத்தில் ஏழு நாட்கள் வேலை கொடுத்தார். எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்" என்று பேசினார்.

    .

    Next Story
    ×