என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
அரசியல் சாயம் பூச வேண்டாம்.. பசவராஜ் பொம்மை சந்திப்பு குறித்து ரிஷப் ஷெட்டி பதிவு
- இயக்குனர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா -2’ திரைப்பட வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
- இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
காந்தாரா
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி - பசவராஜ் பொம்மை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"கொல்லூரில் முகாம்பிகை தரிசனம் செய்ய சென்ற போது முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்தேன், எனக்கு அரசியல் சாயம் வேண்டாம், காந்தார எழுத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன், உங்கள் அனைவரின் அன்பும் வரமாக அமையட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வரவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ಕೊಲ್ಲೂರು ಮುಕಾಂಬಿಕೆ ದರ್ಶನಕ್ಕೆ ಹೋದಾಗ ಮಾನ್ಯ ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳ ಭೇಟಿಯಾಯಿತು, ರಾಜಕೀಯದ ಬಣ್ಣ ಬೇಡ, ? ಕಾಂತಾರದ ಬರವಣಿಗೆಯಲ್ಲಿ ಸಂಪೂರ್ಣ ತೊಡಗಿ ಕೊಂಡಿದ್ದೇನೆ, ನಿಮ್ಮೆಲ್ಲರ ಪ್ರೀತಿ ಆಶೀರ್ವಾದ ಇರಲಿ ?? pic.twitter.com/Sw7WjiRWdG
— Rishab Shetty (@shetty_rishab) April 13, 2023