என் மலர்
சினிமா செய்திகள்
தாத்தா பட்டம் பெற்றாலும் நீங்கள் எவர்கிரீன் ஹீரோ தான்.. சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்த ரோஜா
- ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது.
- இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ராம் சரண்-உபாசனா
இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா, ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தாத்தாவானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிரஞ்சீவி காரு. இதயத்தில் என்றும் இளமையாகவும் எப்போதும் ஆற்றல் மிக்க இந்த குடும்பத்தில் ஒரு அழகான மெகா இளவரசி ஆசீர்வதிக்கப்படுவது எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம்.
அன்புள்ள ராம்சரண் நீ குழந்தையாக இருந்த போது உன்னை என் கைகளில் கட்டியணைத்த அந்த மறக்கமுடியாத நாட்களை நினைவு கூர்கிறேன், இப்போது உனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியான செய்தியை கேட்பது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சிரஞ்சீவி காரு தாத்தா பட்டம் பெற்றாலும் நீங்கள் எவர்கிரீன் ஹீரோ தான். உபாசனா மற்றும் குட்டி மகாலட்சுமிக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
My heartiest congratulations to @KChiruTweets garu on becoming a grandfather. It is a blessing by Almighty to this ever young at heart and always blooming with an energy personality to be blessed with a lovely #MegaPrincess in the family. Dear @AlwaysRamCharan I recollect those…
— Roja Selvamani (@RojaSelvamaniRK) June 21, 2023