என் மலர்
சினிமா செய்திகள்
போஸ்டர் வெளியிட்டு பிரபாஸுக்கு வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு
- நடிகர் பிரபாஸ் 'சலார்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சலார் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, நடிகர் பிரபாஸ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.