என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![சமந்தா படத்தின் புதிய அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம் சமந்தா படத்தின் புதிய அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/01/1815335-sa2.webp)
சமந்தா
சமந்தா படத்தின் புதிய அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
சாகுந்தலம்
இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
சாகுந்தலம்
இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Starting this new year with an exciting announcement ?#Shaakuntalam update tomorrow at 11 AM ✨@Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @neeta_lulla @tipsofficial #EpicLoveStory #MythologyforMilennials pic.twitter.com/L2EE12M5Ol
— Sri Venkateswara Creations (@SVC_official) January 1, 2023