search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் பெண்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பவன்- ஷாருக்கான்
    X

    நான் பெண்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பவன்- ஷாருக்கான்

    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இதுவரை ரூ.900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில், ஒருவர் 'ஜவான்' படத்தின் கடைசி பாடலை பகிர்ந்து, "ஹேய், விக்ரம் ரத்தோர், நீ ஆசாத் மற்றும் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதை ஐஸ்வர்யா சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுவாய்? என்று கேள்வி எழுப்பினார்."


    அதற்கு ஷாருக்கான், "நான் மிகவும் ரொமாண்டிக் மற்றும் மனதளவில் பெண்களுக்கு அதிகமாக மதிப்பு கொடுப்பவன் என்று அவளுக்கு தெரியும். நான் செய்யும் குறும்பு தனங்களால் அவள் மகிழ்ச்சியடைவாள். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    Next Story
    ×