search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனராகும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்
    X

    இயக்குனராகும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்

    • பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
    • இவர் கதை ஒன்றை எழுதி முடித்துள்ளார்.

    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி முடித்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் பெயரிடப்படாத கிளாப் போர்ட் மற்றும் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு "கதை எழுதி முடித்துவிட்டேன்.. ஆக்‌ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


    ஆர்யன் கான்

    இதற்கு, " யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துகள். அது எப்போதும் சிறப்பானது." என்று நடிகர் ஷாருக்கான் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    ஆர்யன்கான் பதிவு

    இந்த கதையானது வெப்தொடரின் கதை என்றும் 2023-ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×