என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
பீஸ்ட் காட்சிகள் லாஜிக் இல்லாதவை.. மலையாள நடிகர் கருத்து..
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்த படம் பீஸ்ட்.
- இதில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ பயங்கரவாதியாக நடித்திருந்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனம் பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வணிக வளாகத்தை கைப்பற்றும் பயங்கரவாதிகள் கூட்டத்தில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். இவர் அண்மையில் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் ''பீஸ்ட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த படம் குறித்த ட்ரோல்களைப்பார்த்தேன்.
பொதுவாக ஒருவர் எடையை தூக்கினால் முகத்தில் அந்த கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. தீவிரவாதியை சூட்கேஸாக எடுத்துச் செல்லும் காட்சிகள் லாஜிக் இல்லாதவை. அதற்கு விஜய்யை குறை சொல்ல முடியாது படக்குழு தான் இதற்கு காரணம் என்று கூறினார். மேலும் 'பீஸ்ட்' படம் எனக்கு தமிழில் ஒரு 'நல்ல என்ட்ரி இல்லை. ஆனால், ஒரு பெரிய படத்தில் நடிக்கும்போது, அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வரும்'' என்று தெரிவித்தார். ஷைன் டாம் சாக்கோவின் இந்த பேட்டியானது விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.