என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது.. பாடகி சின்மயி வருத்தம் சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது.. பாடகி சின்மயி வருத்தம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/14/1881186-chi3.webp)
சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது.. பாடகி சின்மயி வருத்தம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சின்மயி-ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்தாக அறிவிக்கப்பட்டது.
- தற்போது சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனதையடுத்து சமீபத்தில் சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில் சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது. கட்டிடங்களில் அதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம்?. இதை எப்படி சமாளிப்பது. கைக்குழந்தைகளை மோசமாக கடித்து விடுகிறது என்று பதிவிட்டு, குழந்தையை கொசு கடித்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.