search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இளையராஜா சொன்னதால் நடிக்கவில்லை - பாடகர் மனோ
    X

    மனோ

    இளையராஜா சொன்னதால் நடிக்கவில்லை - பாடகர் மனோ

    • அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'
    • இப்படம் நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.

    மேலும், பாடகர் மனோ, மா.கா.பா. ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் மனோ பேசியதாவது, '' இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், மிர்ச்சி சிவா ஆகியோருக்கு நன்றி. 'சிங்காரவேலன்' படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

    ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குனரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு. என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படக்குழு

    'சிங்காரவேலன்' படப்பிடிப்பின் போது ஒரு முறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குனர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அதன் போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் 'வணக்கம்' வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்." என்றார்.

    Next Story
    ×