என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
காணொலியை பார்க்கும் பொழுது நானும் வருத்தப்பட்டேன்.. சூர்யா கீழடி சர்ச்சை பற்றி சினேகன் கருத்து
- சில தினங்களுக்கு முன்பு கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
- அப்பொழுது மாணவ-மாணவிகளை நீண்ட நேரம் வெளியே காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைபிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியத்தின் உள்ளே இருந்ததால் அங்கு வரக்கூடிய மொதுமக்களையும், மாணவர்களையும் வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.
இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கீழடி அருங்காட்சியத்தை பார்ப்பதற்காக வந்தேன். நம் பெருமைகளையும் தரவுகளையும் மிகவும் அழகாக பராமரித்துள்ளனர். இந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு மனமில்லை. வரலாற்று புகைப்படங்கள், அதன் வழிமுறைகள் கேட்கும்பொழுது இன்னும் சற்று தமிழ் திமிரு தலைக்கேறி நிற்கிறது, பெருமையாக இருக்கிறது.
இந்த மண்ணுக்கு துரோகமான செயலை இந்த மண்ணுக்குறியவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த மண்ணுக்கு எந்த கெடுதல் நடந்தாலும் அதற்கு எதிராகதான் நாங்கள் நிற்போம். அதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நீதிமையத்திற்கு இருக்கிறது. மக்கள் நீதி மைய்யத்தின் உறுப்பினராகவும் ஒரு கவிஞனாகவும் எனக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது என்றார்.
மேலும் கீழடியில் சூர்யா குடும்பத்தினர் வந்திருந்த பொழுது மாணவர்களை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. வெறும் தகவல்களின் அடிப்படையில் வைத்து பேசுவது சரியாக இருக்காது. அவர் வேண்டும் என்று செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதோ தெரியாமல் இது நடந்திருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அவர் அப்படி செய்கிறார் ஆள் இல்லை, அப்படி கண்டிப்பாக அவர் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனவே இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்றைக்கு எனக்கும் அந்த காணொலியை பார்க்கும் பொழுது சின்ன குழந்தைகள் வெளியே நிற்கிறார்களே என்று நானும் வருத்தப்பட்டேன். ஆனால் காட்சியில் பார்த்ததற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்பதற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. எனவே நான் தெரியாமல் தீர்ப்பு சொல்லிவிடகூடாது. இது எல்லோருக்கும் பொதுவானது எனவே அனைவரும் பார்த்து நம் பெருமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்