என் மலர்
சினிமா செய்திகள்
கமல் தயாரிப்பில் சிம்பு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
- நடிகர் சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இதைத்தொடர்ந்து இவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிம்பு
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சிம்புவின் 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
எஸ்.டி.ஆர்.48
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் பிளட் அண்ட் பேட்டில்' (Blood and Battle) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.