என் மலர்
சினிமா செய்திகள்
ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கும் சூர்யா-43 படக்குழு
- சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சுதா கொங்கரா- சூர்யா கூட்டணியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.