என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
ஞாயிறுக்கு அப்பறம் திங்களு.. தை பொறந்தா பொங்கலு.. டி. ஆரின் பொங்கல் வாழ்த்து
- தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- டி. ராஜேந்தர் தனது பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டி. ராஜேந்தர்
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான டி. ராஜேந்தர் தனது பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "குடும்பத்தோட கண்கள்... அதுதானே பெண்கள். ஞாயிறுக்கு அப்புறம் திங்களு...தை பிறந்தால் பொங்கலு. சூரியனுக்கு படைக்கத்தான் சக்கர,சக்கர பொங்கலு. கதிர் தரும் கதிரவன கரும்பா நினைக்கும் பொங்கலு" என பாடியுள்ளார். உடல்நல பாதிப்பு காரணமாக சில மாதங்களாக ஓய்வில் இருந்த டி.ராஜேந்திர் மீண்டும் பழைய உற்சாகத்துடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.