என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
வாழ்க்கையில வேணும் 'டாஸ்க்' எல்லாரும் போடுங்க 'மாஸ்க்'.. டி.ராஜேந்தர் விழிப்புணர்வு
- நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார்.
- டி.ராஜேந்தர் அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார். அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக அவர் பேசியதாக தெரிகிறது.
டி.ராஜேந்தரை பார்த்ததும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில், பெண் ஒருவர் தனது குழந்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்றபோது, அவரை அருகில் அழைத்து டி. ராஜேந்தர் போட்டோ எடுத்துக்கொண்டார்.
பின்னர், அங்கிருந்த மக்களிடம், "எல்லாரும் பாதுகாப்பாக, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அரசாங்கம் கூறும் சட்டத்தை பின்பற்ற வேண்டும்" என்று கூறியதோடு, தனக்கே உரிய ஸ்டைலில், "வாழ்க்கையில எல்லாருக்கும் வேணும் டாஸ்க், உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க்" எனக் கூறினார்.
இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. தனது சொந்த வேலை காரணமாக வந்த இடத்திலும் அவருக்கே உரிய பாணியில் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.ராஜேந்தருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.