என் மலர்
சினிமா செய்திகள்
X
கமலின் "தக் லைஃப்" படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
Byமாலை மலர்5 Jan 2024 2:12 PM IST
- கமல் நடிக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' (Thug Life).
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோவை சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இந்நிலையில், 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Next Story
×
X