என் மலர்
சினிமா செய்திகள்
அயலி இயக்குனருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
- இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் ‘அயலி’.
- ’அயலி’ வெப்தொடர் சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார்.
இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் கடந்த ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டியுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "அயலி'. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குனர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்" என்று பதிவிட்டுள்ளார்.
'அயலி'. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன். pic.twitter.com/mxBCGfXMND
— Udhay (@Udhaystalin) February 13, 2023