என் மலர்
சினிமா செய்திகள்

வாத்தி
இணையத்தை கலக்க வரும் 'வாத்தி' டிரைலர்.. எப்போது தெரியுமா.?
- தனுஷ் - சம்யுக்தா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’.
- இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
வாத்தி
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
வாத்தி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
The D-mania is about to begin ?#VaathiTrailer releasing on ??? ??? ?@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @adityamusic @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio #SrikaraStudios#Vaathi pic.twitter.com/rSL6exfDx9
— Seven Screen Studio (@7screenstudio) February 6, 2023






