search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முதல்முறையாக இளையராஜா இசையில் தனுஷ்.. அப்டேட் கொடுத்த விடுதலை படக்குழு..
    X

    முதல்முறையாக இளையராஜா இசையில் தனுஷ்.. அப்டேட் கொடுத்த 'விடுதலை' படக்குழு..

    • இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
    • இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    இளையராஜா -தனுஷ்

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    தனுஷ்

    இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் பாடியுள்ளனர். நடிகர் தனுஷ் முதல்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×