என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது -விஜய் ஆண்டனி
- விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- இப்படம் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும், 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி யாருமே சொல்லாத cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் வெற்றி பெற்றது என கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது, Cringe என்று சொல்லி நாம் பல விஷயங்களை மறக்கிறோம். வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்காக தான் நாம் அனைவரும் ஏங்குகிறோம். அதனை பலரும் Cringe என கூறிவிடுகிறார்கள். யாருமே சொல்லாத Cringe விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது என்று பேசினார்.