என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும்.. பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி
- விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.
- இப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். மாமனிதன் திரைப்படம் இன்று ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். விஜய் சேதுபதி, சீனுராமசாமி உள்பட படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை அவர் தெரிவித்துள்ளார். அதில், ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி மாமனிதன் படம் மூலம் கிடைத்தது, இயக்குனர் சீனுராமசாமி அவரது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து இப்படத்தை ஒரு யதார்த்த படமாக மாற்றியுள்ளார். விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துடன் ஆத்மார்த்தமாக கலந்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Maamanithan Got the satisfaction of watching a good film,Dir @seenuramasamy put his heart &soul and made this a realistic classic👏 @VijaySethuOffl 's brilliant performance deserves a national award.Music from Maestro @ilaiyaraaja & @thisisysr blended soulfully with the film.
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 23, 2022