என் மலர்
சினிமா செய்திகள்
மரணத்தின் வியாபாரி இவன்.. வைரலாகும் விஜய் சேதுபதி போஸ்டர்
- அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஜவான் போஸ்டர்
இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், 'மரணத்தின் வியாபாரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Ready to conquer! #JawanPrevue Out Now! #Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu pic.twitter.com/lTxMQAffmb
— VijaySethupathi (@VijaySethuOffl) July 24, 2023