search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்துவிடுகிறது.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
    X

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்துவிடுகிறது.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

    • இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' .
    • இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மலையாளத்தில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தை தற்போது இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ரீமேக் படத்தில் நடித்தது ஏன்? என்பது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது "மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    படத்தை பார்த்தேன் 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார். திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்துவிடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுபோன்ற சிறந்த படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும்'' என்றார்.

    Next Story
    ×