என் மலர்
சினிமா செய்திகள்
விஷால்- ஹரி கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்
- நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார்.
- இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
விஷால் 34 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஷாலின் 34-வது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Hit the drums ? Elated to have the Rockstar @ThisisDSP on board #Vishal34 - get ready for some exciting music coming your way!#DSPjoinsVishal34 #ProductionNo14 @VishalKOfficial #Hari @ZeeStudiosSouth @karthiksubbaraj @kaarthekeyens @alankar_pandian @Kirubakaran_AKR @onlynikil pic.twitter.com/L3EsR4ZhXO
— Stone Bench (@stonebenchers) July 14, 2023