search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஷாலுடன் முதல் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர்.. எந்த படத்தில் தெரியுமா?
    X

    விஷாலுடன் முதல் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர்.. எந்த படத்தில் தெரியுமா?

    • நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    விஷால் 34 போஸ்டர்

    இந்நிலையில், விஷால் 34-வது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். விஷாலுடன் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





    Next Story
    ×