என் மலர்
சினிமா செய்திகள்
கண்ணில் கொலை வெறி.. கையில் மனித தலை- வைரலாகும் விஷால் பட வீடியோ
- நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார்.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ரத்னம்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான டீசரையும் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.