search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஷாலுக்கு சிறப்பு பரிசளித்த யோகிபாபு
    X

    விஷாலுக்கு சிறப்பு பரிசளித்த யோகிபாபு

    • இயக்குனர் ஹரி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். விஷால் 34 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு யோகிபாபு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, காரைக்குடி படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபு, முருகர் சிலை ஒன்றை வாங்கி விஷாலுக்கு பரிசளித்துள்ளார். இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×