என் மலர்
சினிமா செய்திகள்
X
முதல்வரின் படத்தை டாட்டூ போட்டுக் கொண்ட நடிகர் விஷால்.. வைரலாகும் புகைப்படம்..
Byமாலை மலர்24 Jan 2023 3:34 PM IST
- 'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது.
- நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்த திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரித்திருந்தனர்.
விஷால்
'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது. இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஷால் தனது மார்பில் பிரபல நடிகரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான எம்.ஜி.ஆரின் படத்தை டாட்டூவாக போட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் டாட்டூ
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டாட்டூ உண்மையானதா? அல்லது படத்திற்காக வரையப்பட்டாதா? என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
Next Story
×
X