search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உதவும் குணம் கொண்ட அஜித்தை சந்தித்தேன்- விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
    X

    உதவும் குணம் கொண்ட அஜித்தை சந்தித்தேன்- விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி

    • நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
    • அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.


    இந்நிலையில், நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கானை அஜித் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், "பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார். மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித்" என பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×