என் மலர்
சினிமா செய்திகள்
X
யோகிபாபு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு
Byமாலை மலர்4 Jan 2023 9:33 AM IST (Updated: 4 Jan 2023 11:15 AM IST)
- இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'.
- இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடற்கரையில் குழந்தைக்கு எதையோ யோகிபாபு காட்டுவது போன்று இடம்பெற்றிருந்த அந்த போஸ்டர் ரசிக்ரகளை கவர்ந்தது.
இந்நிலையில் பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Next Story
×
X