என் மலர்
சினிமா செய்திகள்
என்னை அடிக்கடி பாராட்டுவார்.. எம்ஜிஆர் குறித்து ஸ்வாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை லதா
- கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமாக ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார்.
- நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.
பழம்பெரும் நடிகை லதா, மாலைமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு..
ராமநாதபுரம் ராஜாவின் மகளான நான் சினிமாவுக்குள் நுழைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எம்ஜிஆர் இயக்கிய அவருடைய சொந்த படத்தில் நான் அறிமுகமானேன். அந்த காலத்திலேயே வெளிநாட்டில் படப்படிப்பு என்று அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. அதே மாதிரி என்னை இதுவரை ராணியாகவே வாழவைத்துள்ளது.
கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமா ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் எனக்கு நடிப்பு மீது ஈடுபாடு இருந்தது. எம்ஜிஆர் தலைமையிலேயே நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதும் நடத்தினோம். இதில் 35 லட்சம் கிடைத்தது. நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.
நான் எல்லோருக்கும் கொடுத்தேன்.. நீ எனக்கு கொடுத்திருக்கிறாய் என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்லுவார். அதன்பிறகு தேர்தலில் மாபெரும் வெற்றிப்பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.. என்றார்.