என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லப்பர் பந்து படத்தின் 2-வது பாடல் நாளை மறுநாள் வெளியீடு
    X

    'லப்பர் பந்து' படத்தின் 2-வது பாடல் நாளை மறுநாள் வெளியீடு

    • மோகன்ராஜன் எழுதி பிரதீப்குமார், ஷிவாங்கி பாடிய 'சில்லாஞ்சிருக்கியே' என்ற முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.
    • படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடித்து உள்ள 'லப்பர் பந்து' படத்தின் 2-வது பாடல் நாளை மறுநாள் (22-ந்தேதி) வெளியிடப்படுகிறது. 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    மேலும் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்ராஜன் எழுதி பிரதீப்குமார், ஷிவாங்கி பாடிய 'சில்லாஞ்சிருக்கியே' என்ற முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.


    இந்நிலையில் படத்தின் 2-வது சிங்கிள் டிராக் பாடல் நாளை மறுநாள் (22-ந்தேதி) வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (வதந்தி வெப் சீரிஸ் புகழ்), பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனிஆடியோ உரிமை பெற்று உள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    Next Story
    ×